Tuesday, May 03, 2005

இணைப்பு இணைய விளம்பரம், சுரங்கவண்டி

Shreks Online Posted by Hello

செம்மஞ்சட்தொடர்வண்டி, பொஸ்ரன்
'05 மே, 03 செவ். 11:47 கிநிநே.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
-செம்புலப்பெயல்நீரனார்

எங்கம்மா உங்கம்மா யாரோ?
என்னப்பா உன்னப்பா கூட்டோ?
என் பாதை உன் பாதை ஒன்றோ?
களித்தரையோடு மழைநீர் போலே
கலந்துற்றோம் காதல் உள்ளு(ளூ)ற்றே
-நம்காலப்படிபாடினார்

எங்காத்தா ஒங்காத்தா யாரு?
என் நய்னா ஒன் நய்னா தோஸ்தோ?
என் ரூட்டு ஒன் ரூட்டு ஒண்ணோ?
பாரு பொறம்போக்கு நெலத்திலே மழே
ஜோரு ஜாயிண்டாச்சு தோ தில்லே லவ்
-வம்புலம்பெயர்நீரானார்

0 Comments:

Post a Comment

<< Home